போக்குவரத்து அதிகம் உள்ள கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் இருந்து காந்தி ரோடு செல்லும் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி முன்பு சாலையோரத்தில் சிலர் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.