திட்டக்குடி தாலுகா வெண்கரும்பூர் கிராமத்தில் உள்ள மெயின் ரோட்டில் அதிவேகமாக வாகனங்கள் செல்கின்றன. இதனால் சாலையில் செல்லும் பாதசாரிகள், பள்ளி மாணவர்கள் அச்சப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது. இதை தவிர்க்க மெயின்ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியம்.