கோவை மாநகராட்சி 92-வது வார்டு சுகுணாபுரம் (மைல்கல்) முதல் செந்தமிழ் நகர் வரை பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் முடிந்ததும் குழிகள் மூடப்பட்டன. ஆனால் பழுதான சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் தற்போது ரோடு மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அதனால் அனைத்து வாகனங்களும் தட்டுத்தடுமாறி செல்கிறது. மேலும் வாகன விபத்துகளும் நடக்கிறது. அதனால் சாலையை சீரமைத்து தரமான தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.