சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா திருப்பாச்சேத்தியின் திடல் பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.