கோவை செல்வபுரம் முதல் பேரூர் செல்லும் மெயின் ரோடு மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அனைத்து வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கிறது. மேலும் 2 சக்கர வாகனங்களில் செல்வோர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். இதேபோல் பொதுமக்களும் நடந்து செல்ல முடியாத நிலை நிலவுகிறது. எனவே சேதமான சாலையை சீரமைத்து தரமான தார்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.