தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி, அரசு ஆஸ்பத்திரி வழியாக செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர், மேலும் அரசு ஆஸ்பத்திரிக்கு வாகனத்தில் வரும் நோயாளிகளும் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
அபூபக்கர்,அதிராம்பட்டினம்
===========