கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் மற்றும் கோபால்நாயுடு பள்ளி சந்திப்பு பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தட்டுத்தடுமாறி செல்கிறது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இதேபோல் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தார்சாலை போடுவதற்கு ஆவன செய்வார்களா?
பாரதி, கோவை