கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2022-09-17 11:40 GMT
குலசேகரன்பட்டினம் தருவைகுளம் அருகில் உள்ள சமத்துவபுரத்தில் இருந்து புதுமனை செல்லும் சாலையை புதிதாக அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டினர். தொடர்ந்து ஜல்லி கற்களை பரப்பி சமதளப்படுத்தினர். பின்னர் சாலை அமைக்கும் பணி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்