கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள வேணுகோபாலபுரம் நகரில் அரசு மகளிர் பள்ளி உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இங்கு வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் பள்ளி மாணவிகள் அச்சப்படுகின்றன. மேலும் விபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியமாகும்.