வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-16 15:04 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு முதுகுளத்தூர் பகுதியில் உள்ள சாலை குண்டும்-குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலையில் பயணிக்க முடியாமல் இருசக்கர வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் சாலையில் பெயர்ந்து கிடக்கும் கற்கள் வாகனங்களையும் பழுதாக்குகிறது.எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்