ஆபத்தான பள்ளம்

Update: 2022-09-14 14:45 GMT


திருக்காட்டுப்பள்ளி -கல்லணை சாலையில் சுக்காம்பார் கிராமத்தின் அருகில் அண்மையில் தார்ச்சாலை போடப்பட்டது. தற்போது இந்த சாலையில் ஆபத்தான மிகப்பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுக்காம்பார் கிராம மக்கள்

மேலும் செய்திகள்