சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் சாலை

Update: 2022-09-14 12:13 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் சாலையில் ஆலமரத்தடியில் இருந்து காவிரி கரை வரை செல்லும் சாலை சேதமடைந்து மண் சாலையாக உள்ளது. இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்துவருகின்றனர். மேலும் இந்த சாலையில் காவிரி கரையில் சுடுகாடு உள்ளதால் அங்கு இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனர். மழை காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மண் சாலையை தார்சாலையாக அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்