திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதி சாலையில் முறையான வேகத்தடைகள் இல்லை. இதன்காரணமாக அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். மேலும், வேகமாக செல்லும் வாகனங்களால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை அமைத்திட நடவடிக்கை எடுப்பார்களா?