தஞ்சை மிஷன்சர்ச் சாலையில் பாதாள சாக்கடை குழி பராமரிப்பு பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டன. இந்த நிலையில் பணிகள் முடிவடைந்தும் பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளது. இதன்காரணமாக அந்த சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி சாலையில் உள்ள பள்ளங்களை மூட நடவடிக்கை எடுப்பார்களா?