செங்கம் தாலுகா மேல்புழுதியூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேளாண்மை கூட்டுறவு சொசைட்டிக்கு பின்பக்கம் உள்ள தார் சாலை பழுதாகி பல ஆண்டுகள் ஆகிறது. சாலையை சீரமைத்துத்தர வேண்டி பல தடவை முறையிட்டும் இதுவரை அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த வழியாக மக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிராம மேம்பாட்டு நிதியில் இருந்து சாலையை சீரமைத்துத்தர வேண்டும்.
-நவாப்ஜான், மேல்புழுதியூர்.