சேதமடைந்த சாலை

Update: 2022-09-12 17:13 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அழகுசமுத்திரம் கிராமம் பவர்கேட் பின்புறமுள்ள மோட்டூர் காடு பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் பூலாம்பட்டியில் இருந்து இரும்பாலை செல்லும் தார்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவா, சேலம்.

மேலும் செய்திகள்