ஆக்கிரமிப்பால் சுருங்கிப்போன சாலை

Update: 2022-09-11 14:49 GMT
கடலூர் துறைமுகம் கோவில் தெருவில் உள்ள சாலையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சாலை மிகவும் சுருங்கிய நிலையில் காணப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்