கல்லணையில் இருந்து வேங்கூர் வழியாக திருச்சி செல்லும் சாலை உள்ளது.இந்த சாலையில் தஞ்சை மாவட்ட எல்லையில் உள்ள ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. கல்லணைக்கு சுற்றுலா பயணிகள் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் பயணிக்கமுடியாமல் அவதிப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கல்லணை