தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் முத்துப்பேட்டை சாலையில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் உள்ளது.இதன் நுழைவு வாயிலில் அருகே தெரு விளக்கு எரிய வில்லை.மேலும் மணிமண்டபத்தின் பெயர் பலகையில் உள்ள விளக்கும் எரியவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்கை எரிய வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை