குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-12 16:02 GMT

திருவாடானை தாலுகா கட்டவிளாகம் கிராமத்திலிருந்து காளி கோவில் உடையார் குடியிருப்பு வழியாக ருத்திரன் பட்டி செல்லும் சாலை உருக்குலைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக உருமாறி உள்ளது. தினமும் இந்த சாலையில் பயணம் செய்யும் பொதுமக்கள், முதியோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் இந்த சாலை முற்றிலும் சேதம் அடைந்து உள்ளதால் வாகன போக்குவரத்திற்கும் சிரமமாக உள்ளது. இந்த சாலையை புதிய தார் சாலையாக அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்