ஈரோடு அருகே மூலப்பாளையம் உள்ள சாலையில் வடிகால் மற்றும் நடைபாதையுடன் கூடிய சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணியை பாதியில் விட்டுவிட்டனா். இதற்காக தோண்டப்பட்ட குழியில் கழிவுநீர் தேங்கி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. உடனே வடிகால் மற்றும் நடைபாதையுடன் கூடிய சாலையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.