குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-10 11:53 GMT

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நுழைவு வாயில் பகுதியில் கோட்டை வடிவிலான ஆர்ச் உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் நகருக்குள் அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. தற்போது, இந்த சாலையானது குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்படுகிறார்கள். எனவே, இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்