உடன்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய தெருவுக்கு செல்லும் வழிகாட்டி பலகையில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் அழிந்துவிட்டது. இதனால் அந்த பலகை எதுவும் இன்றி காட்சி அளிக்கிறது. வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் அந்த தெருவுக்கு எப்படி செல்ல வேண்டும் என்று குழம்புகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலகையில் தெருவின் பெயரை மீண்டும் எழுதுவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?