படியில் தொங்கியவாறு பயணம் செய்யும் மாணவர்கள்

Update: 2022-09-09 13:17 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சியில் கும்பகோணம்-சீர்காழி சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த சாலையில் அரசு கல்லூரியும் இயங்கி வருகிறது. அந்த கல்லூரிக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் தினமும் பஸ்களில் மாணவ-மாணவிகள் படியில் தொங்கியவாறு சென்று வருகின்றன. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மாணவ-மாணவிகளின் வசதிக்காக கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்