திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் அன்னியூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து பேரளம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.