திருவாரூர் மாவட்டம் கமுகக்குடி ஊராட்சி அரசமங்கலம்- லிங்க திடல் மற்றும் அன்பிற்குடையான் இணைப்பு சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த சாலையின் வழியாக சென்று வருகின்றனர். இந்த தார்சாலை தற்போது சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது .எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.