கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் இருந்து டான்போஸ்கோ செல்லும் சாலையில் ஆதிவாசி நலச் சங்க பள்ளி அருகே கடந்த ஆண்டு பெய்த மழையில் சாலையோர மண் திட்டு இடிந்து விழுந்தது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது. தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் தாமதகமாக நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதுடன், பள்ளி கட்டிடம் மேல் மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தடுப்புச் சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.