கோவை புலியகுளம் அருகே ரெட்பீல்டு ஜி.ஆர்.டி. சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துகள் நடந்து ஒரு சில வாகன ஓட்டிகள் படுகாயம் அடைகிறார்கள். எனவே பழுதான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை வேண்டும்.
சாய் கிஷோர், புலியகுளம்.