கன்னிவாடியை அடுத்த ரெட்டியார்சத்திரத்தில் இருந்து கொட்டாரப்பட்டிக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது. கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் பள்ளம், மேடாக மாறிவிட்டதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். புதிதாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?