சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-08 10:29 GMT

நாகை கடைத்தெரு பகுதியில் உள்ள சாலை முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதனால் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். குறிப்பாக தேங்கி கிடக்கும் நீரினால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்