வேகத்தடை வேண்டும்

Update: 2022-09-07 12:44 GMT


தஞ்சாவூரிலிருந்து நாகை செல்லும் சாலை, பட்டுக்கோட்டை பிரிவு சாலை சந்திக்கும் இடத்தில் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இந்த இடத்தில் வேகத்தடை அமைக்கப்படாததால் தற்போது அதிக அளவில் விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளது. மேலும் அருகில் பள்ளிக்கூடங்கள் இருப்பதால் சாலையை கடக்க மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தகுந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்