சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தொளசம்பட்டி காந்தி நகரில் உள்ள ஓம்காளியம்மன் கோவில் தெருவில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த 8 ஆண்டுகளாக மழை காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவசந்திரன், சேலம்.