மேச்சேரி அருகே கூனாண்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் முன் மழை தண்ணீர் அதிகளவில் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பெற்றோர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதனை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தனசேகரன், கூனாண்டியூர், சேலம்.