சேலம் வீரபாண்டி தாலுகா பெருமாம்பட்டி ஊராட்சியில் திருமலைகிரியில் இருந்து பெருமாம்பட்டி செல்லும் வழியில் கோவில்காடு பகுதியில் தார் சாலை சேதமடைந்து உள்ளது. மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
-வெற்றிவேல், சேலம்.