கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக லங்கா கார்னரில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று அரசு ஆஸ்பத்திரியில் இருந்து லங்கா கார்னர் செல்லும் வழியில் இரும்பு குழாய் இறங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.