சாலை வசதி வேண்டும்

Update: 2022-09-05 12:07 GMT

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவில் 57 குலமாணிக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் தெற்கு தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல ஆண்டுகளாக போதிய சாலை வசதி இல்லை. இதனால் அந்தபகுதிமக்கள் மண் சாலையை பயன்படுத்தி வருன்றனர். மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்