மதுக்கூரில் இருந்து மன்னார்குடிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் இலக்கணம் பேட்டை பகுதியில் சாலையோரத்தில் நகர்பகுதிகளில் இருந்து இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை சிலர் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த கழிவுகளை தின்பதற்காக ஏராளமான நாய்கள், பன்றிகள் வருகின்றன. இவை சாலையின் குறுக்கே ஓடுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.