கூத்தாநல்லூர் தாலுகாவில் அரிச்சந்திரபுரம் கடைவீதியில் ஏராளமான கடைகள் ,நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்த கடைவீதியில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்த நிலையில் கடைவீதியை ஒட்டி உள்ள சாலையில் குப்பைகள் கொட்டி வருகின்றனர். ஒருசிலர் இந்த குப்பைகளை கொளுத்திவிடுகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மூச்சு தினறல் உள்ளிட்டவற்றால் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.