உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் முன்பு உள்ள சென்னை சாலை பலத்த சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்ல பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அடிக்கடி வாகனங்களும் பழுதாகி வருகிறது. இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.