கரூர் -ஈரோடு செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள நத்தமேட்டில் இருந்து குந்தாணி பாளையம் செல்வதற்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக தார் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக சிதறடைந்து உள்ளது. இந்த தார் சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள், லாரிகள், கார்கள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் என சென்று வருகின்றன. இந்நிலையில் சாலை நெடுகிலும் பழுதடைந்துள்ளதால் வானங்கள் தட்டுதடுமாறி செல்கின்றன. சில நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.