சாலையில் தேங்கும் மழை நீர்

Update: 2022-09-02 16:45 GMT

சேலம் அழகாபுரம் பேர்லேண்டஸ் பகுதியில் கான்வென்ட் ரோட்டில் 2 பள்ளிகள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான பள்ளி குழந்தைகள் இவ்வழியாக செல்கின்றனர். மழை காலங்களில் அடிக்கடி இந்த சாலை குண்டும் குழியுமாக மாறி தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தீபக்குமார், சேலம்.

மேலும் செய்திகள்