சாலை வசதி வேண்டும்

Update: 2022-09-02 13:33 GMT

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதி தென்குவளவேலி ஊராட்சி வடகுவளவேலி தெருவில் முறையா சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகனங்களும் அடிக்கடி சேற்றில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்