சேலம் வீரபாண்டி ஒன்றியம் மாரமங்கலத்துபட்டி மற்றும்அழகு சமுத்திரம் கிராமத்தில் முதியோர் ஓய்வூதியம், தேசிய ஊரக வேலைக்காக ஊதியம் வழங்கும் சேவை மையம், இரும்பாலை காந்திநகரில் உள்ளது. இந்த மையத்திற்கு செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் ஓய்வூதியம் வாங்க வரும் முதியோர்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வீராசாமி, இரும்பாலை, சேலம்.