அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், விளந்தை ஜே.ஜே.நகர் பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் முன்பு உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள், பள்ளி மாணவிகள் நடந்து செல்லவே லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.