கடலூர் சூரப்பநாயக்கன் சாவடி விலக்கு சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலை பள்ளத்தில் வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி காயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருவதால், மாநகர மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சாலை பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.