அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ளது அரக்கட்டளை கிராமம். இங்கிருந்து கடம்பூர் வரை செல்லும் 2 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்வோர் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.