குண்டும்,குழியுமான சாலை

Update: 2022-09-01 12:36 GMT

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த ஆயக்கரன்புலம் ஒன்றாம் சேத்தி வடக்கு குத்தகை பகுதி உள்ளது. இங்குள்ள ஆதிதிராவிடர் சாலையில் இருந்து மருதூர் வரை செல்லும் இணைப்பு சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அந்த வழியாக மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சிரமத்துடன் நடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குண்டும்,குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்