சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2022-09-01 12:24 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் இருந்து நாகூர் செல்லும் சாலை மரைக்கான்சாவடி, பனங்குடி பகுதிகளில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கூட்டமாக நிற்கின்றன. மேலும், இரவு நேரங்களில் மாடுகள் சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, பொதுமக்கள், வாகனஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்