வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2022-08-31 17:33 GMT

சேலம் மணக்காடு பஸ் நிறுத்தத்தில் இருந்து ஜான்சன்பேட்டை நோக்கி செல்லும் சாலையில் அரசமரடி பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே சாலையின் இரு புறத்திலும் கடைகள் உள்ளன. இதனால் காலை மற்றும் மாலை வேளையில் பள்ளி வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்