ஈரோடு ஆனைக்கல்பாளையம்-ரங்கம்பாளையம் சுற்றுவட்டச்சாலையில் இருந்து வாய்க்கால் கரை வழியாக முள்ளாம்பரப்பு செல்லும் பாதை உள்ளது. ரிங் ரோட்டில் இருந்து எளையாம்பாளையம், கிளியம்பட்டி பகுதிகளுக்கு செல்லும் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் இந்த சாலையை பயன்படுத்துகிறார்கள். ஆனால், குண்டும் குழியுமாக இந்த ரோடு இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே வாய்க்கால் கரை சாலையில் ஜல்லி போட்டு, தார் ரோடாக மாற்றித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.